science

img

மராட்டிய மாநில வேளாண் துறை காட்டும் புதிய வளர்ச்சி பாதை

கடந்த பல வருடங்களாக மராட்டிய மாநிலத்தில் உள்ள Osmanabad மாவட்ட விவசாயிகள் கடுமையான வறட்சியால் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்தனர். இதனால் பலர் அருகில் உள்ள நகரங்களுக்கு வேலைவாய்ப்புகளை தேடி செல்லும் சூழல் ஏற்பட்டது.இத்தகைய சூழலில் சுமார் 250 விவசாய குடும்பங்கள் மாநில வேளாண் துறை மற்றும் தங்கள் பகுதியில் செயல்படும் “Shivar Sanstha Vinayak Hegana” என்ற தொண்ட நிறுவனத்தின் உதவியுடன் Osmanabad வெள்ளாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு தங்களது வாழ்வுரிமைகளை பாதுகாத்து வருகின்றனர். இப்புதிய வேளாண் முயற்சியில் விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வெள்ளாடுகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பயிற்சி வழங்கப்பட்டது. இதன் வாயிலாக 25 கிராமங்களில் வெள்ளாடுகள் வளர்க்கப்பட்டு இவற்றின் பால் ஒரு லிட்டருக்கு ரூ.300 என்ற அளவில் கொள்முதல் செய்யப்பட்டு, சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது. இதன் வாயிலாக விவசாய குடும்பங்களுக்கு ரூ.150 வரை லாபம் கிடைக்கும். சுமார் 350 வேளாண் குடும்பங்கள் 400 வெள்ளாடுகளை வளர்த்து வெள்ளாடு பால் உற்பத்தி மற்றும் விற்பனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இருந்து சோப் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. வெள்ளாடு பால் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் மற்றும் செலினியம், ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் கொண்டு உள்ளதால் பல தோல் நோய்களுக்கு நல்ல மருந்தாகவும் உள்ளது. இந்த சோப்புகளை உற்பத்தி செய்ய தேவைப்படும் தொழிற்சாலை வட ஒரு விவசாயி வீட்டிலேயே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளாடு சோப் தயாரிக்கும் காப்புரிமையை கூட கடந்த ஜூலை மாதம் இப்புதிய வாழ்வுரிமை திட்டம் வாயிலாக பல ஆயிரம் விவசாயிகள், பண்ணை மகளிர், விவசாய தொழிலாளர்கள் பயன் பெற்று வருகின்றனர். வருங்காலங்களில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் இந்த புதிய வேளாண் செயல் திட்டத்தில் இணைக்கப்பட்டு தேசிய மற்றும் உலக சந்தைகளில் வெள்ளாடு பொருட்களை விற்பனை செய்யவும் முயற்சிகள் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கடுமையான வறட்சியான சூழலிலும் கிராமப்புறங்களில் வெள்ளாடுகள் வளர்ப்பு மற்றும் சோப் தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டு பல ஆயிரம் விவசாயிகள் பொருளாதார முன்னேற்றம் அடையச் செய்யும் முயற்சிகளை தமிழக விவசாயிகள் கால்நடை உற்பத்தியாளர்கள், பண்ணை மகளிர் கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் தமிழகத்தில் மேற்கொண்டால் நமது கிராமப்புறங்களிலும் அதிக அளவு வேலைவாய்ப்புகள் மற்றும் வணிகம் காரணமாக கிராமப்புற பொருளாதார மேம்பாடு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

;